எங்கள் அன்பு தெய்வமே
உன்னால் பிறந்தேன் இந்த பூமியைகாண
வளரும்போது தெரியவில்லைவாழ்க்கை
என்றால் என்னவென்றுபள்ளிக்கு செல்லும்
போதும் அறியவில்லை எதுவும் பருவ
வயதிலும் குறைஏதும் கண்களில் படலை
அன்புத் தந்தை இழப்பைகண்ணாகப் பார்த்து
கவலை மறக்கச் செய்து நல்லநிலையில் எங்களை
பார்த்துக் கொண்டாய்அமைதியான நம்
ஆனந்த வாழ்வில்அறியாமல் நீஎடுத்த
தவறான முடிவால்அழகான குருவிக்கூடு
அலங்கோலமாகப்பிய்த்து எரியப்பட்டதே
நம் அனுமதியின்றி நம்முள் ஒருவனாக
நம்பிய தந்திரமிக்ககுள்ளநரி கூட்டத்திலிருந்து
வந்த சாதுவாக வேடமிட்ட வேஷதாரியால்
இன்று உன் இழப்பிற்கும் உன் தவறான
கணிப்பே காரணமாயிற்று குழந்தைகள்
பிரிந்து வாழவும் மனித உருக்கொண்ட
மிருகங்கள்காரணமாயிற்று கடவுளை நீ
நம்பினாய் கடவுள் உன்னை நம்பவில்லை
உருகும் உன்மனம் புண்ணால் புரையோடிப்
போனதைப் பார்த்து போதுமென்று அழைத்துக்
கொண்டார் அன்றிலிருந்து இன்று வரை
உன்னை தேடுகிறோம் எங்கு மறைத்து
வைத்திருக்கிறார் உன்னை கொஞ்சம் எங்கள்
கண்களில் பார்க்க அனுமதிக்க சொல்லம்மா
ஒரு முறை ஒரே முறை உன் அருகில்
உன்ஸ்பரிசம் உணர ஆசையாக இருக்கிறோம்
அம்மா எங்கள் அன்பு தெய்வமே