என் மரண நொடிகள்

என்னவனே .....!!!
உன் பிரிவை உயிர் தாங்காது
பிரிய மாட்டேன் என்பதை
என்னிடம் சொல் - நான்
அந்த செய்தியுடன் உயிர்
வாழ்வேன் .....!!!

பிரிந்தே ஆகவேண்டும் ...
என்றால் நீ திரும்பி வரும் ..
வேளையில் உயிருடன் ..
இருப்பவரிடம் சொல் உயிரே ...
உன்னை பிரிந்து வாழும்
நொடிகள் என் மரண நொடிகள் ...!!!

திருக்குறள் : 1151
+
பிரிவாற்றாமை
+
செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 71

எழுதியவர் : கே இனியவன் (5-Sep-14, 8:35 am)
Tanglish : en marana nodigal
பார்வை : 80

மேலே