சொல்லிக் கொடுக்கும் சுகம்

பழைய தமிழனை நாம்
பணியாமல் இருக்க முடியாது !
காலத்தால் வாழப் போகும்
இலக்கியங்கள் கவிதைகளால்
என்று முன்பே கணித்த
மூதறிஞன் அவன்!
எவன்எவனோ நன்றிபற்றி
பேசிக்கொண்டு மட்டும்
பெருமைப்பட,
இவன் மட்டும் தான்
இயல்பாய்ச் சொன்னான்
எழுத்தறிவித்தவன் இறைவன் என்று!
எண்ணும் எழுத்தும் கண்ணென்று சொன்ன
ஏற்றம் வேறெந்த மொழியில் உண்டு?!
தான் பாடும் கவிதைகளில் மட்டுமின்றி
அந்த கவிதைக்கே ஆசிரியம் எனப்
பெயரிட்ட பெருமை தமிழனுக்கே !
தினங்களைக் கொண்டாடுவதை விடுத்து
தினம்தினம் கொண்டாடியவன் தமிழன்!
அதனால் தானோ என்னவோ
இவனைத் திண்டாட வைப்பதில்
திசைகள் எல்லாம் கைகோர்த்து கொண்டு!!!
வணக்கம் ஆசிரியர்களே!
இதை,இப்படி,சொல்லவும்,எழுதவும்
சொல்லித் தந்த நீங்கள் பெற்ற
சுகத்தில் பங்குகேட்டு வந்த
பரபரப்பில் நன்றி சொல்ல மறப்பதற்குள்
நன்றி...நன்றி....நன்றி

எழுதியவர் : அபி மலேசியா (5-Sep-14, 4:15 pm)
பார்வை : 3736

மேலே