அன்னை

அன்னையாகினாய்!!!!

அநாதை என்ற சொல்
பொருளிழந்தது உன் அன்பினால்.!!


ரோகங்கள் கொண்ட தேகத்தை
கருணையினால் கழுவிய
கங்கைநதி நீ...

யாசகத்தையும் யாசிப்பதையும்
யோசிக்காமல் நேசித்த
தேவதைநீ ....

கட்டில்கள் கைவிட்ட பசுமை பஞ்சுகளுக்கு
கைகளினால் தொட்டில் அமைத்த
கடவுள் நீ .....

அன்பின் அகரம் நீ
அதன் சிகரமும் நீ

அன்பை ஆழிப்பெருங்கடலாய் சுமந்தவள் நீ
அருவியாய் சுரந்து பொழிந்ததும் நீ

நிழலாக நீ இருக்கும் வரை
இறக்காமல் இருக்கும்
இந்த உலகத்தில்
இரக்கம்............!!!


அன்பின் காணிக்கையாக இக்கவிதை
அன்புசூழ் அன்னை தெரசாவுக்கு ...........


கவிதாயினி நிலாபாரதி

எழுதியவர் : கவிதாயினி நிலாபாரதி (5-Sep-14, 4:16 pm)
Tanglish : annai
பார்வை : 108

மேலே