உயிர்க் கொல்லிநோய்க்கு துணை போகாதே
கட்டில் சுகம்
சொர்க்கம் என்று
சிலபேரும் கால்வயிறு
கஞ்சிக்கு வழியில்லை
தொட்டவன் கொடுக்கும்
துட்டுத்தான் என்று சிலரும்
உயிர்க் கொல்லிநோயை
அறிந்தும் அறியாமலும்
வரவேற்கின்றனர்...!!!!!
தனக்குள்ளே வயித்துப்
பசிக்கு ஏங்கும்
வஞ்சிகளின் உடலை
புசிக்கும் நரிக் குணம்
படைத்த ஆண்களை
குறை கூறுவதா
பகட்டு வாழ்க்கைக்கு
ஆசைப்பட்டு பல பேரைத்
தொட்டுவரும் பெண்ணைக்
குறை கூறுவதா இருவரில்
ஒருவர் தொட்டசுகம் காண
ஒருவர் தொற்று நோயைக்
கொண்டார்...!!!!
அற்ப சந்தோசத்துக்காக
அரை குறை ஆடை
கலைத்து உறவோடு
இன்பாய் வாழும்
வாழ்வை யும்
அழிக்காதீர்கள் ...!!!
பலர் இடையைத்
தொடும் மனிதனின்
இதழைச்சுவைத்து
உனக்கு நீயேஎமனை
அழைக்காதே மனிதா...!!!
இல்லற வாழ்வில் இன்பம்
கண்டு துன்பம் மறந்து
இயற்கை இறப்பை நீ
வரமாய்க்கேள் இறைவனிடம்
துணைபோகாதே உயிர்க்
கொல்லிநோய்க்கு மானிடா..!!!