என்வாழ்வில் சில காலம்
தாய் என்ற சொல்லும்
சேய் என்ற சொல்லும்
தங்கை
என்ற ஒரு சொல்லில் அடங்கிவிட்டது.
உடன் பிறக்காத போதும்
என் உயிராய் இருந்தவள் அவள்...,
அதிகமாக பழகியதில்லை
ஆனால்
என்னை அதிகமாக புரிந்து கொன்டவள் அவள்...,
காலத்தின் கட்டாயத்தில்
பாதை மாரி பயணித்தாலும்
அவள் பாசத்தின் தீபம் மட்டும்
அனையாமல் இருக்கும்.
ஆசைப்படுகிறேன்
அவள் உடன் பிறந்தவனாய் மாறிவிட ....முடியாது என்று தெரிந்தும்.
உண்மைதான்
நம் தோழி மீதோ...... !!!!!!!!!!!!!
சகோதரியின் மீதோ வைக்கும் பாசம்
காதலை விட
அதிக வலியை தருகிறது.........!!!!!!!!!!!!!