விழித்தெழு என் வாலிபனே

என் சமூகத்து வாலிபனே
சற்றும் சலனமின்று சிந்தித்துப்பார்
உன் முதுகெலும்பிலுன்னால்
நிமிர்ந்து நிற்கமுடியுமென்று
நிருபிக்க வேண்டாமா.......நீ.

சீதனக்கொடுமையில்
சிக்குண்டு சீரழியும் எம்
சீர்குலப்பெண்களை
எம்மைவிடக் காப்பவர்
யாருமுண்டோ...........

பெண்பெற்ற தந்தையும்
பெண்களோடு பிறந்த சகாவும்
பொருள்தேடியலையும்
பரிதாபங்கண்டும்
பகல்கொள்ளையுன்னால் நியாயமா????

உனக்கென ஒருவீடமைத்து
அதிலுந்தன் துணையமர்த்தி
அகிலம்போற்ற வாழ்வுதரும்
உத்தமனாய் உனையாழ முடியாது - உன்
தாய்தந்தையை நரகத்திற்கு தயார்செய்கிறாய்

ஆண்களைப்பெற்ற ஆண்மாக்களே...
ஹறாத்தினைத்தேடியலைந்துங்கள்
ஹலாலான வாலிபங்ளை
வியாபாரம்செய்யும் வக்கிர
வியாபாரியாகாதீர்கள்.......

பெண்களைப்பெற்றவனே
பெண்ணுனக்குச்சுமையில்லை - எம்
மார்கங்கற்றுத்தரும் மாதராய் வளர்த்து
உரிய மணாளன் வரும் வரை
மறுமைவரையேனும் காத்திருக்கச் செய்யுங்கள்

சீதனக்கொள்ளையடித்து
சீரும் சிறப்பென வாழ்வதாய்
மகுழுகின்ற மானிடனே.....
உன்மரணத்தின் முன்
திருடியதை திருப்பிக்கொடுத்துவிடு

ஆலிம்களும் ஆசான்களும்
ஆறஅமர்ந்து வாங்கினார்களென்று
அனியாத்திற்கு வாதம்பேசும் பாமரனே
அவர் செல்லும் வழி
நரகமென்று உணரமாட்டாயா????

என்னன்பு இளைஞனே
ஈருலகத்து சொர்க்கம் நோக்கி
இன்றே புறப்படு - அதை
தடுக்கின்ற காரணிஎதுவாகினும்
இறைவனுக்காகத் தூக்கியெறிந்துபார்
இவ்வுலகத்து வெற்றியாளன் நீதான்

எழுதியவர் : நேசமுடன் ஹாசிம் (6-Sep-14, 3:00 pm)
பார்வை : 91

மேலே