காயம்

எப்போதும் சிரித்துவிட்டு
அவ்வப்போது சுருக்கென்று குத்திச்செல்கிறாய்
நெருஞ்சில் முள்ளும் பூவுமாய்
என் நெஞ்சில்

விரும்பி விரல் வைக்கிறேன்
உன்னைப் பற்றிக்கொள்ளும் சந்தோசத்தில்
சட்டென்று தவறிய நேரத்தில்
சப்பாத்திக்கள்ளியாய் சதைகிழித்துப்போகிறாய்

உன்னை உறிஞ்சிக்கொண்டு
உயிர்க்காற்றை வெளிவிடும்
மரமாய் நான்.....
நீ வேராய்
நுழைந்திருக்கிறாய் - என்னில்
நீராய் கலந்திருக்கிறாய்.....

கார்மேகமாய் உறிஞ்சிப்போகிறாய்
கண்காணாத தூரத்தில் ......

உலகளவு நீர் இருந்தும்
உன்னை தொட்டு தொட்டே
தாகம் தீர்த்துக்கொள்கிறேன்...
ஆழிப்பெருங்கடலாய்

நீ இல்லாத தேகம்
நீர் இல்லாத தேசம் ......

என் உயிர் வளியும் நீ
உறவின் வழியும் நீ.........

எழுதியவர் : கவிதாயினி நிலாபாரதி (6-Sep-14, 2:40 pm)
Tanglish : KAAYAM
பார்வை : 145

மேலே