என் குருதியில் மலரும் மலர்கள் 555

பெண்ணே...
நீயும் நானும்
சேர்வோமா என்றாய்...
என்னிடம்
ஏதும் இல்லை...
எல்லாம் உன்னிடம்
மட்டுமே என்றேன்...
கையில் ரேகைகூட இல்லையா
என்கிறாய் கிண்டலாக...
என்னைவிட்டு நீ பிரிந்து
போனபோதுதான்...
புரிந்து கொண்டேனடி...
நான் நீயும் நானும் சேர்ந்து
வாழும் அதிர்ஷ்டமில்லாத ரேகை...
என் கைகளில் இருப்பதெல்லாம்
என்று உணர்ந்தேனடி...
என் ஜீவன் மண்ணில்
வாழும்வரை...
சுமக்கும் உன் நினைவுகளை
மட்டுமே...
என் ஜீவன் போனபின் உன்
நினைவுகளையே சுமக்கட்டும்...
என் கல்லறையும்...
அங்கும் பூத்திருக்கும்
வண்ண மலர்கள்
உன் கூந்தலுக்கு...
முடிந்தால் பறித்து
வைத்து கொள்...
உன் கூந்தலில்.....