ஓர் எழுத்தாளனின் கதை - இதுவரை I - சந்தோஷ்

ஓர் எழுத்தாளனின் கதை.

இதுவரை..1
------------------------------------------

சூரியன் தன்னை உதயமாக்க ஆயுத்தமாக்கி கொண்டிருக்கும் பனிபெய்யும் அதிகாலை பொழுது. அப்போது சிதம்பரம் மேலவீதியிலுள்ள அந்த மருத்துவமனை பிரசவ அறையில் ஒரு தாயின் கர்ப்பப்பையிலிருந்து இந்த விசித்திர உலகை காண வெளிவர முயற்சித்து கொண்டிருக்கிறது ஒரு குழந்தை..!

சூரியன் மெல்ல மெல்ல பனி படர்ந்த இரவினை கிழித்துக்கொண்டு பிரசவிக்கிறது.

பிரசவ அறையில் ஒரு புதிய கீதம் ஒலிக்கிறது.
சூரியனின் ஒளிகதிர்கள் பிரகாசமாக வெளிச்சமடைய, தினகரன் இந்த மண்ணில் உதயமாகிறான்.

நாட்கள் செல்கிறது. தினகரனின் தசையும், புத்தியும் வளர்ந்து வாலிபத்தை எட்டும் பள்ளி பருவத்தின் இறுதி ஆண்டு..!

அவன் படித்த பள்ளியில் ஒர் இலக்கிய விழா. அதில் பிரபல திரைப்பாடலாசிரியர் முத்துமாணிக்கம்
கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார். அந்த பிரபலத்தின் நாவில் உச்சரித்த அழுத்தமான நயமான தமிழ் வார்த்தைகளால் தினகரன் தன் தமிழ் ரசிப்புத்தன்மையை உணர்ந்தான். அந்த பிரபலம் உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தையிலும் மெய்மறந்து உருகினான்.
சிறப்புரையை முடித்துக்கொண்டு அந்த பிரபல திரைப்பாடலாசிரியர் முத்துமாணிக்கம் தன் காரில் ஏறும் சமயம்…
”எஸ்கியூஸ் மீ சார்.. ஆட்டோகிராப் ப்ளீஸ் “ தினகரன் தன் கையை நீட்டி கேட்க,
புன்னகைத்த முத்துமாணிக்கம் “ எப்படி கண்ணா உன் கையில் கையெழுத்து போடுவது, ஏதாவது பேப்பர் இருக்கா? அதுல போடுறேன்.”
”சார் இல்ல சார்.. நான் பேப்பர் எடுக்கப்போறதுக்குள்ள நீங்க போயிடுவீங்க .. ப்ளீஸ் ப்ளீஸ் மிஸ் திட்டுவதற்குள்ள சைன் போடுங்க சார் “ ஒரு விதமான பதற்றத்தில் தினகரன் கெஞ்சிட,

முத்து மாணிக்கம் “ சரிடா கண்ணா, என்கிட்ட என்ன பிடிக்கும்..? என்னைப்பற்றி உனக்கு என்ன என்ன தெரியும்? “ என்று கேட்டுக்கொண்டே தினகரன் கையில் தன் கையெழுத்தை போடுகிறார்.
--இந்த உலகிலுள்ள மொத்த பனித்துளிகளும் அவன் மூளைக்குள் புகுந்த புதுமை--யை உணர்ந்த தினகரன்
“ சார்.. நீங்க நல்லா பாட்டு எழுதுவீங்க.. அப்பா சொல்லி இருக்கிறார்..
பலமாக சிரித்த முத்துமாணிக்கம்… “ ம்ம் இந்த கையில் இருக்கிற ஆட்டோகிராப் அழிஞ்சிடும்மே..கண்ணா..! என்ன செய்வ…..? இரு என் கைக்குட்டையில கையெழுத்து போட்டு தரேன்..”

”ஹய்ய்யா… ரொம்ப தேங்கஸ் சார்.. இத அப்பாகிட்ட காட்டபோறேன்…” முத்துமாணிக்கத்தை ஒருதலையாக காதலிக்க ஆரம்பித்தான் தினகரன். காரணம் தமிழ். அவரின் தமிழ் உச்சரிப்பு.

தமிழ் உச்சரிப்பு என்பது ஓர் அற்புதகலை.
லகர ,ளகர,ழகர உச்சரிப்பில் நம் நாக்கு, நம் வாய் கூண்டுக்குள் நடனமாடிடும். இந்த உலகிலே இருக்கும் மனிதர்களில் தமிழனின் நாக்கு தான் தலைச்சிறந்தது.
==பல்லில் முத்தமிட்டு
==பள்ளத்தில் முட்டிவிட்டு
==பழத்தில் சுவைக்கொடுக்கும்.

இப்படிப்பட்ட அழகான தமிழை தினகரன் நன்று உச்சரித்து தமிழன் தமிழனாக இருக்கவேண்டும் என்பதே அவனின் தந்தையின் விருப்பம். ஆனால் இதற்கு அடுத்த நாள் முற்றுப்புள்ளி வைத்தது அந்த சம்பவம்.

அடுத்த நாள்…!
பள்ளிக்கு செல்லும் போது, அவன் எதிரே வந்த அந்த மஞ்சள் வாகனம், இவன் மீது மோதும் சில நொடிகளுக்கு முன்…. பிரேக் பிடித்து நிறுத்தப்பட்டது. பயத்தில் தினகரன் மயங்கி விழ.... மருத்துவமனையில்

“டாக்டர் ! இப்போ எப்படி இருக்கு “ தினகரனின் தந்தை

”நத்திங் டூ வொரி சார். நல்லா பயந்துட்டான் போல , அதான் மைல்ட் ஹார்ட் அட்டாக் வந்து மயங்கிட்டான். பயம் தெளிய ரெண்டு நாள் ஆகலாம். பட் அதிர்ச்சியில அவனுக்கு ப்ரெயின்ல சம்திங் ப்ராப்ளம் ஆகிடுச்சு. சோ திக்கி திக்கித்தான் பேசுவான். கொஞ்ச நாள்ல அவனே பிராக்டீஸ் பண்ணினா நார்மல் ஸ்டேஜ்க்கு வந்திடுவான். அண்ட் முக்கியமா உங்க பையனுக்கு ஏற்கனவே வேற ப்ராப்ளமும் இருக்குன்னு ஸ்கேன் ரிப்போர்ட் சொல்லுது … ம்ம் சைக்காலாஜி டிரீட்மெண்ட் கைக்கொடுக்கலாம். அது எந்த அளவுக்கு ப்ரோயஜெனம் படும்ன்னு தெரியாது. ரொம்ப அதிகமா அவனை யோசிக்க வைக்க வேண்டாம்.. “

தினகரனின் தந்தை தன் மகன் திக்கிப்பேசுவான் என்பதை ஏற்றுக்கொள்ளாமல், மனதை உடைத்து அழதேவிட்டார். தன்னை தானே தேற்றி அன்பு மகனை வீட்டிற்கு அழைத்து செல்ல,

“ டாக்டர் அந்த பையனுக்கு என்ன ப்ராப்ளம் ?. ஆசிஸ்டெண்ட் கூட ஆகலையே.. ? “ நர்ஸ் டாக்டரிடம் வினாவுகிறாள்.
“அந்த பையன் மெடிக்கல் ரிப்போர்ட் பார்த்தா தான் தெரியுது ... அவனுக்கு பிறக்கும்போதே மூளை தண்டுவடம் பாதிச்சு இருக்கு.., சோ அதிக ஆர்வம், அதிக உணர்ச்சி, டென்ஷன், பயம் இதுனால அவனுக்கு மூளை அப்போ அப்போ தற்காலிகமாக முடங்கிவிடும் வாய்ப்பு இருக்கு, ஓவரா திங்கிங் பண்ணினா அவன் உயிருக்கு எந்த வயதிலும் கூட ஆபத்து வரலாம். ,, பார்ப்போம் மெடிக்கல் மிராக்கிள்ன்னு ஒன்னு இருக்கு… கடவுள் அந்த பையனை காப்பாற்றுவார்…” என்று டாக்டர் தினகரகனின் வாழ்க்கையை கடவுளிடம் ஓப்படைத்து கைவிரித்து மேலே காட்டுகிறார்.


இந்த திக்குவாய்.. தினகரனின் தன்னம்பிக்கையை குலைத்தது. பள்ளியில் சகமாணவர்களுக்கு “ திக்குவாயான்” தினகரன் என்று அடையாளப்பட்டான்.
தந்தையின் ஆதரவு, பள்ளி வகுப்பு ஆசிரியர் கொடுத்த ஊக்கம் போன்றவற்றால் சற்று திக்குவாயிலிருந்து மீண்டநிலையில்

இளங்கலை உளவியல் கற்க கோவை, பி.எஸ்.ஜி கலை அறிவியியல் கல்லூரியில் அடியெடுத்துவைக்கிறான். தினகரன் பிற்காலத்தில் எழுத்தாளனாக
அவதாரமெடுக்க வைக்கும் கல்லூரிதான PSG CAS .

இளமைபருவத்தின் சந்தோஷம். அந்த வயதுக்குரிய பெண்களின் மீதான ஈர்ப்பு என்று எந்த ஒரு வாலிபத்திற்கான அறிகுறியும் இன்றி மற்ற மாணவர்களிடமிருந்து சற்று வித்தியாசப்பட்டே காணப்பட்டான்.

பகட்டான உடையில் சக தோழர்கள்
அழகான இளம்பெண்களாக சக மாணவிகள் இவர்களுடன் தினகரன்... உளவியல் மாணவனாக தினகரன்.

கல்லூரியின் முதல் நாள், முதல் வகுப்பில்.. தினகரனுக்கு நேர்ந்தது முதல் அவமானம்...!

(தொடரும்.)

-இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (6-Sep-14, 9:56 pm)
பார்வை : 169

மேலே