நீயும் ஒரு பெண்ணானால் நிலவே மறையாதே

A V M ராஜன், காஞ்சனா நடித்து 1965 ல் வெளிவந்த வீர அபிமன்யு திரைப்படத்தில்
கண்ணதாசன் அல்லது பூங்குயிலன் இயற்றி, K V மகாதேவன் இசையமைத்து,
பி.பி.ஸ்ரீநிவாஎஸ், P சுசீலா பாடிய 'நீயும் ஒரு பெண்ணானால் நிலவே மறையாதே'
என்ற பாடல் மிக அருமையான காதலை உணர்த்தும் பொருளுடையது.

1965 ல் இளைஞர்களின் தூக்கத்தைத் தொலைத்து, கனவுகளில் வந்த
காஞ்சனாவையும், உடன் அபிமன்யுவாக நடித்த பாடலை யு ட்யூபில் பார்த்தும்,
கேட்டும் ரசிக்கலாம்.

இந்தப் பாடலைக் கேட்டதும், முத்தொள்ளாயிரத்தில் பாண்டியனைப் பற்றி
ஒரு புலவர் பாடிய,

'புல்லாதார் வல்லே புலர்கென்பார் புல்லினார்
நில்லாய் இரவே நெடிதென்பர்' என்ற வெண்பா நினைவுக்கு வருகிறது.

நீயும் ஒரு பெண்ணானால் நிலவே மறையாதே
உன் நெஞ்சில் ஈரம் உண்டென்றால் இரவே விடியாதே (நீயும் ஒரு)

முத்தமிடும் வேளையிலே மூக்குத்தி தடையாகும்
முத்தமிடும் வேளையிலே இந்த மூக்குத்தி தடையாகும்
அதை சத்தமின்றி கழற்றிவிட்டால் நம் சந்தோஷம் மிகவாகும்
சந்தோஷம் மிகவாகும்

பாயும் தென்றல் காற்றே நீ பறந்து செல்லாதே
இந்த பள்ளியறை உள்ளவரை சங்கே முழங்காதே
நீயும் ஒரு பெண்ணானால் நிலவே மறையாதே

கட்டித் தழுவும் வேளையிலே கை வளை தடையாகும்
கட்டித் தழுவும் வேளையிலே இந்த கை வளை தடையாகும்
அதைக் கழற்றிவிட்டு மெல்ல அணைத்துக் கொண்டால்
நம் காதல் சுவையாகும்
காதல் சுவையாகும்

கூவும் வண்ணக் குயிலே நீ தூக்கம் கொள்ளாதே
எங்கள் கொஞ்சும் மொழி கேட்கும் வரை பொழுதே மலராதே
நீயும் ஒரு பெண்ணானால் நிலவே மறையாதே

கால்களில் விளையாடும் சலங்கை காதலில் இசை பாடும்
கால்களில் விளையாடும் சலங்கை காதலில் இசை பாடும்
அதை இசைவில்லாமல் எடுத்து விட்டால் நம் உலகத்தில் ஆசை வரும்
உலகத்தில் ஆசை வரும்

நீயும் ஒரு பெண்ணானால் நிலவே மறையாதே
உன் நெஞ்சில் ஈரம் உண்டென்றால் இரவே விடியாதே
நீயும் ஒரு பெண்ணானால் நிலவே மறையாதே

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Sep-14, 2:39 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 170

மேலே