வானம் நமது தோழன் வசந்தம் நமது நட்பு

தனிமையில் நினைவை உயர்வாய் வைத்தால்
தாழ்ந்தே வானம் வந்து உரையாடி மகிழும்....!
தன்னம்பிக்கை இழந்து எண்ணங்கள் சென்றால்
தனிமையது நமை நாமே கொல்வதாகப் பொருள் படும்..!

தன் மதிப்பு நாம் உணர்வோம் - அது தானென்ற அகந்தை இல்லை
எனவே
தரணியில் வெற்றிபெற - நம்மை விட்டால் யாருமில்லை...!!

எழுதியவர் : அரிகர நாராயணன் (7-Sep-14, 1:38 am)
பார்வை : 105

மேலே