ஆதங்கம்

ஆதங்கம் ஆதங்கம்
உன்னை என் மார்பின்
மேல் தாங்க ஆதங்கம்
நீ வா தங்கமே....!!!

உன் சுண்டு விரல்
கோர்த்து அக்னியை
சுற்றி வர ஆதங்கம்
நீ வா தங்கமே....!!!

மலர் தூவிய மஞ்சத்திலே
உன் நெஞ்சம் சாய்ந்து
கொஞ்ச ஆதங்கம்
நீ வா தங்கமே....!!!!

உன்னைக் கை
பிடிக்க விடாமல்
முறைத்து நிற்கும்
மாமன் முன்னாடி
நாம் கைகோர்த்து
நடக்க ஆதங்கம்
நீ வா தங்கமே...!!

உன்னை நோட்டம்
போட்ட நாட்டாமை
முன்னாடி நாம்
சென்று வர வேண்டும்
என்று ஆதங்கம் நீ வா
தங்கமே......!!!!!

உனக்கு நாக்கைக்
காட்டி கண்ணைக்
காட்டி சைட் அடித்த
சைத்தான் சகுனி
வீட்டிலும் அழைப்புக்
கொடுக்க ஆதங்கம்
நீ வா தங்கமே.....!!!!!

நாம் ஜோடி சேர
மாட்டோம் என்று
இரு வீட்டிலும் ஓடி
ஓடி பற்ற வைத்த
அத்தை வீட்டிலும்
வெத்தலை பாக்கு
வைத்து அழைப்புக்
கொடுக்க ஆதங்கம்
நீ வா தங்கமே....!!!

ஐயே கருவாச்சி
நீ போ கடைசி
பெஞ்சி என்று
உன்னைப் பார்த்துக்
கூறிய அந்த தாவணி
கலைவாணி முன்னே
நீ தங்கமகளாய்
நடமாட வேண்டும்
அவள் அதைப் பார்த்து
ஏங்க வேண்டும் என்று
எனக்குள்ளே ஆதங்கம்
நீ வா தங்கமே....!!!!

உன் கொட்டகையிலும்
கெட்டி மேளம் கேட்க
வேண்டும் கொட்டம்
போட்ட ஊர் வாயை
அடக்க வேண்டும்
என்பது என் ஆதங்கம்
நீ வா தங்கமே....!!!

ஆதங்கம் ஆதங்கம்
இத்தனை ஆதங்கம்
எனக்குள் உள்ளதடி
தங்கமே என் தங்கமே...!!!

எழுதியவர் : கவிக்குயில் இ.சாந்தகலா (7-Sep-14, 8:59 pm)
Tanglish : aathankam
பார்வை : 84

மேலே