துரத்த முடியாத துக்கம்
அவள் சிரித்தால்
கன்னத்தில் குழி
விழும் அதை ரசிக்க
பலமுறை சிரிப்பூட்டி
பார்த்து ரசிப்பேன்
அவள் சிரிக்கும்
அழகு மட்டும் இல்லை
சிரிப்பு ஒலியும்
கலகலவென சலங்கை
ஒலி போல்
கட்டுக்குலையா
உடலும் அலங்காரம்
குறையா முகமும்
பார்ப்போரை
மயக்கும் கண்களும்
ஆனால் இன்று
அவள் நிலைமையோ வேறு
அழகான அவள் முகமோ
அழகு இழந்து காட்சி
தருகின்றது விம்மி
விம்மி அழுகின்றாள்
கன்னமும் கண்களும்
சிவந்தும்நிறுத்தாமல்
அவளைச் சிரிக்க
வைக்க தெரிந்த
என்னால் அவள்
ஏக்கத்தையும்
கவலையையும்
மறக்கடிக்க
முடியவில்லை
ஆயிரம் கனவைச்
சுமந்து கொண்டு
பல ரகசியம் பேசி
செல்லமாய் சிணுங்கி
பாசமாய் அணைத்து
அன்பாக முத்தமிட்டு
சென்ற கணவன்
விமான விபத்தில்
இறந்த செய்தி
கலங்கடித்து விட்டது
அவளை
தன் கணவனை
பறித்த இறைவனை
திட்டி அழுகின்றாள்
விமானியைத்
திட்டுகின்றாள்
துடிக்கும் இவளை
நான் என்ன சொல்லி
தடுப்பேன் இறைவா
செய்வது அறியாது
நான் தவிக்க அவள்
துக்கத்தில் துடிக்க
இன்றைய நாளும்
பகலைக் கடந்து
இரவைப் பிடிக்கலானது