காதல் பரீட்சை

என் கண்கள் கேட்ட கேள்விக்கு
உன் மௌனம் அளித்த விடைகளால்
காதல் பரீட்சை எழுதிவிட்டேன்

என் காதலை எடுத்து
கவிதையில் தொடுத்து
கண்ணீரில் நனைத்து
உன்கையில் கொடுத்தேன்

அதை நீ
எடுத்து ......!
பிரித்து .......!
ரசித்து .....!
படித்து ....!
முடித்து ....!
திருப்பி தர மறுக்கிறாய்

எனக்கு என் காதல் வேண்டாம்
கைம்மாறாக உன் காதலை
தந்துவிடுவாயா?

எழுதியவர் : ம.கலையரசி (9-Sep-14, 2:43 pm)
Tanglish : kaadhal pareetchai
பார்வை : 126

மேலே