இதுவும் கவிதைதான்

கவிதை வரிகள் தன்னை
வார்த்தைகளுக்குள்
சுருக்கிக் கொண்டு
அர்த்தங்களில் அழ
வைக்க வேண்டும்.

நானோ
ஒரு நல்ல கவிதைக்காக!
கவிதை வரிகளாய்
வார்த்தைகளுக்குள்
அழுது கொண்டிருக்கிறேன்...
அர்த்தமே இல்லாமல்!!

உங்களில் ஒருவர் - இதை
உள் நிறுத்தி வாசித்தால்....
உள்ளீடற்ற வரிகளெல்லாம்
உன்னதக் கவிதைகள்தான்!!






எழுதியவர் : iravivekha (24-Mar-11, 7:59 pm)
சேர்த்தது : iravivekha
பார்வை : 396

மேலே