அல்- குரான் சமயப்பற்று

நபிக்கு உரைத்த வேதம்
நாமும் உரைக்க வேண்டும் ...

இறையோன் விடுத்த சொல்லு
மனிதா ! இதனை புரிந்து கொள்ளு ..

பொய்கள் இதனுள் இல்லை
புரிந்தால் மாற்றலாம் மனக்கல்லை...

வாழ்வின் வழிகாட்டி இதுவே...
மறுத்தால் உனக்கு எல்லாம் இருளே ..

இது துறைகள் உள்ளோருக்கு துணை புரியும்
இறைவழி நடந்தால் அருள் புரியும்


தொட்டால் தோன்றிடும் ஜ்ச்சானம்
இதெட்குள்ளும் பல உண்டு கானம்

வேண்டிடும் பிரார்த்தனை கை கூடும்
தோன்றிடும், ஒளி போல் மண்ணறைக்குள்ளும்

அல்- குரான் என்ற வேதம்
குறைகளை மெல்லத் தீர்க்கும்..
குணங்களை சரி பார்க்கும் ..

சூனியம் .செவ்வினை.. ஏவல் எல்லாம் .
இந்த வேதத்துக்கு முன்னாள் தூசு..
சூத்திரக்காரர்கள் சுகம் காணவென்றே ..
விற்றுபெருகிரார்கள் காசு..

தீவிரவாதத்துக்கும் பெரும் பாதகத்துக்கும்
இட்டுசெல்லுதே .. என்கிறது உலகம்
மன அமைதியும் , அகிம்சையும் நிறைந்ததேன்பதால்
நல்லவர்களுக்கே.. திறந்திருக்கிறது அச்சுவனம்

இவ்வேதம் முட்காலமும் சொல்லும் பொக்கிஷம்
நேர்வழி பல எடுத்துக்கூறும் உபன்னியாசம்

நேர் வழி பெற - நல் வழி நட -.....
------------------------------------------------------------------------
ரிப்னாஸ் - திக்குவல்லை - தென்னிலங்கை

எழுதியவர் : ரிப்னாஸ் - திக்குவல்லை - தெ (11-Sep-14, 3:00 pm)
பார்வை : 147

மேலே