விசித்திர கோலங்கள்-------அஹமது அலி------

சூரியனை
சுட்டுவிடும்
தீக்குச்சி.!

சமுத்திரத்தை
பருகிவிடும்
சொட்டு.!

பூமியை
விழுங்கிவிடும்
பள்ளம்.!

வானை
மூடி மறைக்கும்
பொட்டு.!

காற்றை
உறிஞ்சிவிடும்
மூச்சு.!


மேகத்தை
கட்டியணைக்கும்
மேனி.!

இடியை
மிரட்டும்
ஓசை.!

மின்னலை
பறிக்கும்
கரம்.!

நட்சத்திரத்தை
கண்ணடிக்கும்
நயனம்.!

மரத்தை
மறைத்திடும்
கனி.!

மாமலையை
சுமந்திடும்
மடல்.!

எழுதியவர் : அலிநகர். அஹமது அலி. (12-Sep-14, 8:31 am)
பார்வை : 186

மேலே