தேவை தேவை

அன்று!!
என் தேவை அதிகம் இல்லை
உருவாக்கினார்கள்....

நான் தோன்றிய கணம்
என்னை பயத்துடன் அணுகினார்கள்....

ஆனால் இன்றோ!!
என்னை மையமாய் வைத்து
உருவாக்கினர் புதியவற்றை....

அன்று!
சிறு சிறு தேவைக்குத்தான் பயன்பட்டேன்....
அதனால் எந்த மாசும் இல்லை....

ஆனால்

இன்று!
என் தேவை அதிகம்!
தேவை இல்லை என்று
என்னால் உருவாகியவை ஏற்படுத்தும்
மாசும் அதிகம்....

என் தேவை அதிகம்
சிக்கனம்தான் இல்லை
தேவை இல்லாத இடத்தில்
என்னை உபயோகிப்பதால்....

இப்படிக்கு
மின்சாரம்!!!!....

-மூ.முத்துச்செல்வி

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (12-Sep-14, 1:22 pm)
சேர்த்தது : மூமுத்துச்செல்வி
பார்வை : 79

மேலே