என் பொம்மகுட்டி அம்மா
எப்போதும் சிரித்து கொண்டே இருக்கிறாள்
என்று நீ கேட்ட கேள்விக்கு பதில் தெரியாத முட்டாள் நான்
பொம்மை சிரிப்பு என்ன விளக்கம் தர முடியும் புரிகிற மாதிரி
நீ சிரிக்கும் ஒரு ஒரு முறையும் பொம்மை சிரிப்பதாக உணர்கிறேன்
உன் தோழிக்கு அலங்காரம் செய்துவிட்டு நீ பள்ளிக்கு செல்கிறாய்
தோழிக்கு ஊட்டிவிடுவது போல பாவனை செய்து
நீ சாப்பிடுவதும் , கோவமாக அடித்துவிட்டு -நீயே
செல்லமாக அனைத்து கொள்ளவதும் என்னும் அழகாக மாறுகிறது பொம்மை தோழி !!!!