ரசித்து விடு தேனே - இராஜ்குமார்

ரசித்து விடு தேனே
===================

அழகை கொஞ்சம்
குறைத்துக் கொள் அன்பே
விலைவாசி எல்லாம்
விதவிதமாய் ஏறுது

பால்முகத்தை தினம்
மறைத்து வை பெண்ணே
பாலின் விலை
இருமடங்காய் மாறுது

உடலை மாயமாய்
ஒளித்து வை கண்ணே
சிற்பம் முழுக்க
களவு போகுது

மனதை வேகமாய்
செழிக்க வை அழகே
தியாகம் தினமும்
தீர்ந்து வாடுது

கனவை தூரமாய்
அனுப்பி வை திமிரே
கற்பனை தேடி
என்கை அலையுது

காதலை இன்றே
ரசித்து விடு தேனே
கவிதை வடிவில்
என்னுருவம் மறையுது

-இராஜ்குமார்

நாள் : 31 - 5 - 2011

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (14-Sep-14, 3:47 pm)
பார்வை : 116

மேலே