பெரியார்

நான்யார் நீயார் நாம்யார்
நமக்குச் சொன்னார் பெரியார்
தாயார் போல வந்தார் -அறிவை
தந்தார் எங்கள் பெரியார்
வையம் போற்றும் இனியார்
வைக்கம் வீரர் பெரியார்
அய்யா தானே பெரியார்
அவர்போல் இங்கே இனியார் ?
மூட பழக்கத்தை எதிர்த்தார் -முக
மூடியை எல்லாம் கிழித்தார்
தாடிக் காரப் பெரியார் -
தமிழர் பெற்ற வலியார்
மனிதனை நினைக்கச் சொன்னார்
மனதில் வலிமை தந்தார்
தனியாள் இல்லை பெரியார்
தமிழர் பெற்ற படையார்

எழுதியவர் : சு.ஐயப்பன் (14-Sep-14, 5:29 pm)
Tanglish : periyaar
பார்வை : 137

மேலே