மனம் நோக
உன்னால் முடியாது
உனக்கென்ன தெரியும்??
இது கூட தெரியாதா?
இதுக்கு இதானே அர்த்தம்??
இதை கண்டுபிடிக்க இவ்வளவு கஷ்டமா?
தமிழில் எத்தனையோ
வரிகள் இனிமையாய்
பேசுவதற்கு இருக்க
அடுத்தவர் மனம் நோக
இப்படித்தான் பேசவேண்டும் என்று
மாநாடு கூட்டித் தீர்மானம்
போட்டிருக்கும் சிலர்
தங்கள் வார்த்தைகளால்
சிதறி சின்னாபின்னமாகி
மனம் வெடித்து
நொந்து போய் இருக்கும்
அடுத்தவர் மனம் குறித்து அறிவாரா??