அன்புள்ள தந்தை

பிறக்கும் போது
அரவணைப்பு
இல்லை ...
அதிகாரம் மட்டுமே
இருந்தது
தந்தையிடம்......!
வளரும் போதும்
போதுமான
பிடிப்பு இல்லை
எங்கள்
இருவருக்கும்..
எப்போதும்
என்னை
அதிகாரம் செய்வது தான்....!
வேலைக்கு
செல்லும் போதும்
கூட
முடிந்த பாடில்லை ....
ஆனால்
தந்தை
இறக்கும் போது
தான்
நான் ஒரு
நல்ல
வழிகாட்டி
தோழன்
அதிகார அன்பு
எல்லாவற்றையும்
இழந்து
விட்டேன் என்று .....!

எழுதியவர் : (15-Sep-14, 10:24 am)
சேர்த்தது : தேவராஜ்
பார்வை : 81

மேலே