வாடிய மனங்களும் வாடாத ரோஜாக்களும் பகுதி - II

மழைச்சாரல் காற்று தன முத்தமதை பூவிதழ் தீண்டலாய் மேனியெங்கும் தர மெய்மறந்து இன்னும் சில நொடிகள் பேருந்து நிறுத்தத்தில் நிற்ற தேன்குழைத்த மேனியாள் அவளை விழிகள் அகலாது பார்த்தன மரக்கிளை விட்டிறங்கிய பூக்கள் ........

நெற்றித்திலகம் இப்படியும் வைக்கலாமென்று கற்றுகொள்ளலாம் , வகிடுதெரியாது தலை வாரி பூவைத்த பூவை போன்றவள் , கழுத்தில் உள்ள வியர்வையும் கொஞ்சம் தரையிறங்க ஆசை கொள்ளும் அவள் முன்னழகில் , அவள் பின்னே நடனமாடி நடக்கும் கூந்தலும் , நாட்டியம் கற்றவள் என்பதை வெளிப்படுத்தும் நடையும், இரு திங்கள் பட்டினி கிடந்ததை போன்ற இடையும் , நேர்த்தியாக அவள் உடலை சுற்றிகொண்ட நாகம் போன்ற உடையும் , அதிர்ந்து பேசாத பாஷையும் , பழச்சுவையை நினைவுபடுத்தும் இதழும் , படபடக்கும் பட்டாம்புச்சி போல் சிறகடிக்கும் இமையும் , மின்னல் வெட்டி செல்வதை போன்ற பார்வையும் , நிலம் பார்த்து பாவை இவள் நடந்திடினும் நிற்றவர் யாவரும் இவளை கண்டது நிச்சயம் உண்மையே., ஹ்ம்ம் இவளை வர்ணிக்க வார்த்தைகள் தேவையில்லை ,மௌனமாய் நாம் விடும் பெரும்மூச்சு ஒன்றே சொல்லிவிடும் அவள் யாரென.
வருணனைகள் கொஞ்சம் அதிகமென்றாலும் அவள் அதற்க்குத் தகுதியானவளே. ஆம் இப்படி காண்போரையெல்லாம் கவர்ந்த இக்கன்னி தான் நம் ஜோசி.

வெண்ணிற மேனியில் பச்சைவண்ண ஆடை அவள் அழகை கொஞ்சம் மெருகேற்றியதென்னமோ உண்மைதான்., ஆனால் அவளின் சிறகடிக்கும் இமைகள் மட்டும் ஏனோ இப்படி சிறகொடிந்து போய் கிடக்கிறதே..?


அவளின் சோர்வினை யாரும் உணராது பார்த்துக் கொள்ளும் இவள் ஏனோ இப்படி துவண்டு போய் நிற்கிறாள்..? பணப்பாவையின் பெரிய கார்கள் எங்கே..? அவளோடு எப்போதும் நிழல் போல் நடக்கும் பாதுகாவலர்கள் எங்கே..? இறப்பினை கண்முன் கண்டவள் போல் இவள் அசையாது நிற்கும் காரணமென்ன..?

தினமும் எந்த பேருந்து நிலையத்தில் நின்று அந்த அழகியலில் தனைதொலைத்து அவள் பின் ஆன்மாவை அலைய விட்டானோ அங்குதான் மீண்டும் அவளை காண்கிறான்.
ஆனால் எவ்வளவோ மாற்றங்கள் நிகழ்ந்தேறியிருப்பது போல் ஓர் உணர்வு.. இந்த மெத்த அழகியலில் அப்படி என்னக்கோளாறு..?

யோசனை நீடித்தாலும் அவளிடம் இப்போது சென்று பேசுவது அவ்வளவு உகந்த காரியமில்லை எனத்தோன்றவே தன்வாகனத்தை அலுவலகம் நோக்கிச் செலுத்திவிட்டான் எழில்.

ஆம். சில மாதங்களுக்கு முன்பு இதே இடத்தில, குல்முகர் மலருக்கு பதிலாய் வாக்கிங் வந்த ஜோசியின் அழகில் தனை மறந்து நின்றவன். சட்டென வந்து சென்ற மின்னலாய், வந்தது பெண்தானோ இல்லை , பிரமையோ..? இனி சிந்திப்பது வீண்.அவள் பெண்தான் எனக்கே எனக்கானவள், என்னுடையவள் , இவள் தான என் தேவதை. இந்நாள் வரை மிகவும் கட்டுப்பாடாய் வளர்த்து வந்த விரதம் இன்று எனையும் மீறி இப்பெண்ணின் பக்கம் சாய்ந்து போகுமென்று நான் கற்பனையிலும் கண்டதில்லை.

எழில் .,
[ நேரே நின்று இவன் விழி நோக்க எவரும் இல்லை அப்படி ஒரு வசியப்பார்வைக்கு சொந்தக்காரன். கட்டுடல் காளை என்பதை வெளிப்படுத்தும் அவன் தேகமும், இந்தக்காலத்து இளைஞன் என்பதைக்காட்டும் அவன் நேர்த்தியான உடையும், சீவிக்கலைத்து விட்ட கேசமும் , நேர்கொண்ட பார்வையுடன் நிமிர்ந்து நிற்ற அவனின் தொனியும் சொல்லிவிடும் இவன் எப்படிப்பட்ட எழில் நிறைந்தவன் என்பதை, எனில் தானோ என்னமோ அவன் பெயரும் அதுவாகிப்போனது., ]

அலுவலக பணிகள் முடித்து வீடு வந்து சேர்ந்தவன் ஏனோ இன்று உறங்க மனமில்லாது , ஜோசியின் நினைவில் மூழ்கிப்போனான்.,

டேய் எழில் இன்னும் உறக்கம் வரவில்லையா..? அப்படி என்ன யோசனை எனக்கும் சொன்னால் நானும் சேர்ந்து சிந்திப்பேன் அல்லவே ..? என்றபடி ரூமினுள் நுழைநதான் சந்தோஷ்

திரும்பியவனின் விழிகள் குலமாகிப்போக பதறிப்போயவிட்டான் சந்தோஷ். என்னடா ஆச்சு சொல் என்றான் எழிலின் தோளைப்பற்றியவனாய்.,


விம்மல் நிற்கும் முன்பு அவன் சொன்ன வார்த்தை , மச்சன் ஜோ.,.,ஜோ....ஷ்.,...,,.., ஜோ ..ஷியை. பார்த்தேண்டா .!!!!!!!!!!


மவுனம் மட்டும் பதிலாய் தந்து
அப்படியே உறைந்து போய்விட்டான் சந்தோஷ்....


நண்பனுக்கு ஆறுதல் சொல்வதையும் மறந்து,.,.,,






தொடரும் ,,,,.,,,,.


Smila.

எழுதியவர் : ஜென்னி (15-Sep-14, 12:44 pm)
பார்வை : 183

மேலே