அண்ணா

நானறிந்த அண்ணா நாடறிந்த அண்ணா
நம் நாடு தந்த நல்லறிஞர் அண்ணா
மூதறிஞர் போற்றும் பேரறிஞர் அண்ணா
முத்தமிழ் அறிஞருக்கும் அண்ணாவாம் அண்ணா
அன்புரசம் ததும்பும் அன்பாளர் அண்ணா
கம்பரசம் தந்த எழுத்தாளர் அண்ணா
ஓரிரவு நாடக படைப்பாளர் அண்ணா
ஒருவனே தேவனென்றே உரைத்தாரே அண்ணா
குடிசைகளை மாற்றி வீடுதந்த அண்ணா
படி அரிசி தந்த முதலமைச்சர் அண்ணா
தமிழ் தென்றல் புகழ்ந்த தமிழறிஞர் அண்ணா
தமிழ்நாடு தந்த தலைவர் நம் அண்ணா
கைத்தறியை காத்த காஞ்சிபுரத் தண்ணா