இளவேனிற் காலம் உற்று நோக்குகிறது

மலர்கள் மலர்கின்றன, மனம் மகிழவில்லை;
மலர்கள் உதிர்கின்றன, மனம் வருந்தவில்லை;
உன்னை ஒன்று கேட்கிறேன்! மலர்கள் மலர்வதையும்,
உதிர்வதையும் கவனிக்க நாம் தவறுகிறோமா?
புற்களுக்கு அடியில் நாம் இருவரும்
ஒருவர் இதயத்தை மற்றவர் அறிவோம்!
வருங்காலத்திலும் நாம் என்றும்
நண்பர்களாகவே இருப்போம்!
இளவேனிற் காலத்தின் சலிப்பு
மறைந்து கொண்டிருக்கிறது;
ஆனால் இளவேனிற் காலப் பறவை
இன்னும் சோக கீதம் பாடுகிறது!
காற்றுக்கும், மலருக்கும் தினமும்
வயது ஏறிக் கொண்டே இருக்கிறது!
திருமண நாள் இன்னும்
வெகு தூரத்தில் இருக்கிறது!
அதே இதயத்துடன் நாம் என்றும்
அன்று போல் இருக்கப் போவதில்லை!
வெற்றிடமே புல்லாகவும், இதயமாகவும்
இருக்கப் போகிறது!
ஆதாரம்:: Spring Gazing
சீனாவின் பெண் கவிஞர் Xue Tao (768 A.D. to 831 A.D).
இவர் 450 கவிதைகளுக்கு மேல் எழுதியிருக்கிறார்.