என்னோடு நீ-5

பிரம்மனே அதிசயத்து
திருஷ்டிப்பொட்டு வைத்தனுப்பிய
மச்சமோ நீ...!
எனக்குள்ளேயோர் ஆணேயென்று
திகைக்க வைத்தஎனது
சின்னமீசையோ நீ...!
சிரிக்கவைத்து மட்டுமே
பார்த்து ரசிக்கும்
கன்னக்குழியோ நீ...!
மறையாத நினைவுகளை
மறந்திடாது தந்துபோன
வடுவோ நீ...!
சட்டென திரும்பவைக்கும்
எனதுபெயரை சுமந்துவரும்
குரலோ நீ...!
எனதழகினை எனக்கே
ரசிக்க சொல்லித்தரும்
கண்ணாடியோ நீ...!
எனக்காக ஏங்கி
தவித்தழுது தேடிடும்
சிறுபிள்ளையோ நீ...!
இதழ்கள் சிவந்துதெரிய
காரணமாய் மாறிப்போன
உதட்டுச்சாயமோ நீ...!