கல்லெறிந்த குளம்
..."" கல்லெறிந்த குளம் ""...
உனக்காய் நான், எனக்காய் நீயென்றே
அகிலத்தில் பிறந்தோமென ஆணவம்
கடிவானம் இல்லாத நம் கற்பனைகள்
எட்டுத்திக்கிலும் சிட்டேனவே பறந்தன
விதியின் விளையாட்டு விடைமாற்றியது
தொட்டு பார்த்த இடமெல்லாம் கவிதைகள்
தொட்டிடாத இடங்களோ காவியாமாய்
புரட்டி படித்திடும் முன்னே இடறியேவிழ
கல்லெறிந்த குளத்தில் காட்சிகளிங்கு
வட்டமிட்டு வட்டமிட்டு வலம்வரும்
தெளிந்த பின்பும் ஏனோ தெளியாமலே
திரைசீலைக்கு பின் மங்கிய பிம்பமாய்
கண்ணாடியை பார்க்கின்ற சித்தாந்தம்
பார்க்கும்போது முன்னாள் வருகிறாய்
நினைவேவேண்டாமென்று நினைத்து
மறக்காமலே நினைத்து வாடுகிறேன்
காலம் ஒருநாள் நம்மை பிரிக்குமென்று
காதலுக்கு தெரிந்ததோ! ஆதலால்தானோ
அது உயிர் எல்லைவரை உந்திச்சென்று
காதலின் விதையினை விதைத்ததோ
வேரறுக்க முடியா வேதனையில் வாட
வேடிக்கை பொருளாய் வீதியிலானேன்
தூக்கிலிட்டாலும் துடிதுடிக்க மரணம்
தூங்காத நினைவுகளால் துடிக்கும்வரை,,,,,,,
என்றும் உங்கள் அன்புடன்,,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்....