என் மாயவனின் முகத்தோற்றம்

சுருட்டு முடியும்
முரட்டு மீசையும்
வைத்தாலே பெண்களுக்கு
பிடிக்கும் எனும் கருத்தை
மாற்ற வந்தவன் தான்
என் மாயவன் !!

விரல் கோதிய பட்டுப்போன்ற கேசம் !!
மெட்டுக்கள் சொல்லும் நெற்றி !!
வான வில்லாய் வளைந்து நிற்கும் புருவங்கள் !!
மின்னல் கீற்றை தெறிக்கும் கண்கள் !!
அரிவாளை போல் கூறிய மூக்கின் நுனி !!
மெல்லிய பூக்களை போல் அரும்பிய மீசை !!
சொர்க்கத்தின் வாசற் கதவாய் இதழ்கள் !!

இவை கண்டவுடன்
கன்னியவள் யாராயினும்
காதலில் விழுவாள் !!

எழுதியவர் : யாதிதா (16-Sep-14, 10:59 am)
பார்வை : 95

மேலே