பரண்

பரண்

நம் பழயனவற்றின் புகலிடம்
நினை வகன்றவை நிரப்பிடும்
இவை பயனிலா வெனில்
அவை சேரும் முதலிடம்

மனதிலும் ஒரு பரண்
சில நினைவுகளின் முரண்
அவை பயனிலா வெனிலும்
பல விளைவுகளின் அரண்

பரணிற்கும் தேவை மராமத்து
உருப்படா வற்றின் ஒழிப்பு
மனதிற்கும் அஃதே காப்பு
களைவது வாழ்வில் செழிப்பு

எழுதியவர் : முரளி (16-Sep-14, 2:26 pm)
Tanglish : paran
பார்வை : 139

மேலே