சுடுகாட்டு ஞானம்

சுடுகாட்டு ஞானம்
**************************
அன்றைய கனவு பற்றி
கொஞ்சம் சொல்லத்தான் வேண்டும்..

பயந்து ஓடுகிறேன்....
ஒருவர்....இருவர்...
எனத் தொடங்கிப் பின்
கூட்டமாய்த் துரத்த
பயந்தோடிக்கொண்டேயிருந்தேன்...

மூச்சிரைத்தது, கால்கள் தளர்ந்தது,
நுரையீரலோ
மார்புக்கூட்டைக்
கிழித்து வெளிவரும் போலிருந்தது,

உயிரோடு விடுவாராயின்,
இனி உணவுக் கட்டுப்பாடும்
உடற்பயிற்சியும்
சத்தியமென
நினைத்துக் கொண்டே ஓடினேன்,

அத்தணை பேரிடமும்
அகப்பட்டு,
அடிதாங்க முடியாது அலறியதில்
தூக்கம் கலைந்து விழித்தெழுந்தேன்....

தண்ணீர் குடித்துத் தூங்கிப் பின் எழுந்தேன்,
தூங்கிப் பின் எழுந்தேன் நாளெல்லாம்...
அக் கனவின் நினைவிருந்தும்..!

எழுதியவர் : ஆண்டன் பெனி (16-Sep-14, 3:43 pm)
Tanglish : sudugaattu nanam
பார்வை : 87

மேலே