சுயநலம்

சுயநலம்

சுயநல வேள்வியில்
சுயத்தையே இழக்கிறாய்
சுகநல ஆசையில்
சுருங்கிப் போன இதயமாகிறாய்
மரத்துப்போன உணர்வுகளில்
மனிதாபிமானத்தைத் தேடு
பேராசைத் தீயில்
நீதியை எரிக்கிறாய்
குற்ற உணர்வுகளில்
பிராயச்சித்தம் தேடு
விலங்குகள் கூட
தன்னினம் அழிப்பதில்லை
மனிதன் மட்டுமே
மனிதனைக் கொல்கிறான்
மனிதம் மலர
சுயநலம் சுக்குநூறாகட்டும்

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (16-Sep-14, 2:13 pm)
Tanglish : suyanalam
பார்வை : 86

மேலே