எழுதிய எண்ணம் எதுவும் போதவில்லை - இராஜ்குமார்

எழுதிய எண்ணம் எதுவும் போதவில்லை
=======================================
மனமும் உனை விட்டு மாறவில்லை
மனதில் படிப்பு சிறிதும் ஏறவில்லை
விழிகள் உன்முகத்தை காணவில்லை
உன்கண்ணை காண்பது அவ்வளவு எளிதில்லை
உன்நினைவு மனதிலிருந்து நீங்கவில்லை
தினமும் உனைநினைக்க நினைவு போதவில்லை
உந்தன் தொலைவுகள் இங்கே தூரமில்லை
உந்தன் மவுனம் இன்னும் கலையவில்லை
காதலை உணர்த்த அடிகடி சந்திக்கவில்லை
உள்ளத்தின் காதலை நீயே உணரவில்லை
எந்தன் மனதை புரிய யாருமில்லை
அன்பிற்கு விட்டு விலக விருப்பமில்லை
எந்தன் ரசனை நீண்டும் தீரவில்லை
எழுதி கிழிக்கும் நானும் மாறவில்லை
கைச்சேரும் காலம் எனக்கு தெரியவில்லை
உன்கை சேர்ந்த வரிகள் ஏதும் கவிதையில்லை
எழுதிய எண்ணம் எதுவும் போதவில்லை
உனைஅடையும் அதிஷ்டம் எந்தன் அருகிலில்லை
உன்னோடு இணைவேன் என்பதில் உறுதியில்லை
காதலை மறக்க நானின்னும் மடியவில்லை
- இராஜ்குமார்
நாள் : 7 - 6 - 2011