வறுமை
செருப்புகள் கூட சுமக்க மறுக்கும் பாதம் இது
பாவம் பருந்துகள் கூட பதம் பார்க்க சதையில்லா தேகம் இது
உடலின் கண்காட்சி பொருளாய் எலும்புகள்
எப்போது உணவு என்னும் சொப்பன்னதில் கண்கள்
என்ன பாவம் செய்தேனோ
ஏன் இந்த கோலம் கொண்டேனோ
உருகும் மெழுகின் உடலை போல்
உயிரும் இங்கு உருகியதே
ஏழையாய் ஏன் பிறந்திட்டேனோ
வறுமை என்னும் எலியாய்
பூனையிடம் அகப்பட்டேனோ