ஆண்களே இது நியாயமா
என் ஆசை சொல்லவா
என் வாழ்க்கை அல்லவா
கனவுகள் மெய்பட
முயலும் பூ நானல்லவா
நான் பிறந்ததும் அழுதனர்
பெண் என இருந்ததால்
பிறந்ததும் கவலை ஏனோ
கட்டிகொடுக்கும் செலவுதானோ
கடமைக்கு வளர்த்தனர்
கல்வியை கொடுத்தனர்
கடமைக்கு கொடுத்தாலும்
கண்ணென கருதினேன்
படிப்பிலும் குறைவில்லை
படித்ததிலும் குறைவில்லை
போகும் இடமெல்லாம்
பெண் என்பதால்
தொல்லைக்கும் பஞ்சமில்லை
பெண் உரிமை என்பதெல்லாம்
எட்டோடு உள்ளவரை
எங்களுக்கு பாதுகாப்பு
என்றுமே இங்கில்லை
இருக்கும் இடத்தில
ஆபத்துகள் மாறலாம்
ஆபத்து நிச்சயம்
எங்கும் அரங்கேறலாம்
அத்தனை தாண்டியும்
ஜெய்க்க போராடும்
எங்கள் இனம் எப்போதும்
தினம் தினம் போராடும்
காதலால் கொஞ்சம்
காமத்தால் கொஞ்சம்
போக பொருளாய் கொஞ்சம்
பொருளுக்கு நிகராய் கொஞ்சம்
எங்கள் துணை எங்கும் வேண்டும்
அங்கேலாம் மனம் துளி போக வேண்டும்
எங்கள் கனவு மட்டும்
நாளும் நாளும் பொய்க்க வேண்டும்
சம்மதம் சொன்னாலும்
காரியம் முடிந்ததும்
கழட்டி விடும் கனவான்கள்
நம் அருகில் கோடி கோடி
பெண்ணிலை விடியுமா
நாளை நடக்குமா
என்பதெல்லாம் கனவாய்
தொடருமா
ஆண்களே இது நியாயமா