ஆசிட் வீச்சுக்கு ஆளான பெண்ணின் கண்ணீர் ஓலம்

'சிறு வயது முதலே
கனவுகள் அடுக்கி வைத்து
ஓவவோன்றாய் நினைவாக்கி
பெற்றோரின் செல்ல பிள்ளையாய்
உலா வரும் பருவம்
கேட்டதெல்லாம் கேட்கும் ஓசை
முடியுமுன்னே வீடு வந்து சேரும்
அப்பாவின் பாசத்தோடும்
பருவம் வந்ததடா
தொல்லையும் சேர்த்து
காதல் எனும் பேரில்
என்னை நேசிப்பதாய்
எப்போதும் சுற்றும்
தெருவுக்கு நால்வர்
நல்லவன் என்று பார்த்தல்
அதில் எவனும் இலர்
வீட்டுக்கு தெரிந்தால்
படிப்பு பாதியில் நின்று போகுமென்று
மறைத்தேன் முதன் முறை
சந்தோஷமாய் இருப்பதை
பெற்றோர் முன் நடித்தேன்
காதல் கடிதம் நீட்டி
மாலைக்குள் பதில் வேண்டி
மிரட்டி சென்றான் ஒருவன்
நெஞ்சம் பாரமாய்
பதில் மறுத்ததால்
ஆசிட் வீசி சென்றான்
வெந்தது என் முகம் மட்டுமல்ல
என் வாழ்க்கையும்தான்
என் கனவெல்லாம்
தீபுண்ணாகி வெந்து போன
முகத்தோடு இனி
என்ன செய்ய நான்
நான் படித்து நல்ல சம்பாதித்து
காப்ற்றுவேன் என கனவு கண்ட
என் பெற்றோரின் கனவு
இன்று தவிடு பொடியாய்
என்றுதான் கிடக்கும்
எங்களுக்கும் சுதந்திரம்
காதலை காரணம் காட்டி
அழிக்கும் இந்த ஆண் கயவர்களிடமிருந்து

எழுதியவர் : ருத்ரன் (18-Sep-14, 6:41 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 76

மேலே