உன் வருத்தத்தின் வெளிப்பாடு

என்னை விட்டு நிரந்தரமாக
பிரிய வேண்டுமே
என்ற உன் வருத்தத்தின்
வெளிப்பாடு
உன் கதறல்...

என் உடல் செல்லும் வழியெங்கும்
மனதை மயக்கும் பூமழை...
உடுத்திக்கொள்ள பட்டாடை....
அணிந்து கொள்ள பொன் ஆபரணம்

வேறெதையும் தந்திருக்க வேண்டாம்
அன்பாக நீ தினமும்
நாலு முறை பேசியிருந்தால் கூட போதும்;

இதில் ஒரு பாதியை
நான் உயிரோடு இருக்கும் போதே
சந்தோஷமாக கொடுத்திருக்கலாம்..

பெட்டியில் அடங்கியிருக்கும்
என் உடல் இதில்
எதைக் கண்டு மயங்கி விடும்?
அதனால் என்ன பயன்??

எழுதியவர் : சாந்தி ராஜி (18-Sep-14, 11:15 pm)
பார்வை : 216

மேலே