20-09-14---பாதை
இந்தப் பாதை எங்கே போகுது?
யாருக்கும் தெரியாது!
இதிலே இறங்கி நடப்பவர் நெஞ்சில்
ஏக்கம் கிடையாது!
கடந்து போன வற்றை யாரும்
நினைப்பது கிடையாது!
உடைந்து போன மனங்கள் இதிலே
ஊர்தலும் முடியாது!
சொந்த போதை இருக்கும் மட்டும்
சோர்வுகள் சேராது!
சிந்தை அதனில் சேர்ந்தே இருக்கச்
சேரிடம் வாராது!
முந்தி நடந்தோர் முனைப்பில் இதுவும்
முளைத்தது கிடையாது!
மூச்சை விட்டு முடித்துக் கொள்வோர்
முன்பும் நில்லாது!
இலட்சியம் என்னும் பெயருடன் சிலபேர்
ஏறுவர் இதன்மேலே!
அலட்சியம் செய்பவர் கூட இதில்தான்
அசைந்தே செல்வாரே!
முக்தி என்ற ஓளியைக் காட்டி
முன்சிலர் போவாரே!
முன்னுள வற்றை நேசி என்றும்
முனைபவர் வருவாரே!
பாசம் நேசம் பழக்கம் என்று
பகுத்துப் பாராதே,
வேசம் சின்னம் எல்லை நிறங்கள்
விடுத்து நடப்பீரே!
சக்தி இருக்கும் மட்டும் இதிலே
சவாரி போவீரே!
யுக்தி தொடரும் பயணம் தனிலே
யோசனை விடுப்பீரே!
=== === === ===