மழலை
பனித் துளி பட்டு சத்தம்
இன்றி மலர்ந்த மொட்டின்
இதழ்போல் உள்ளதடி
உன் புன்னகை மலர்ந்த
இதழ்கள் தேன் சேர்க்கும்
தேனீயாட்டம் கொட்டும்
பார்வையடி உன் விழியில்
பாபை உன்னைப் பார்க்கையில்
படைத்தவனும் உன்னைத் தூக்கி
ஒரு அன்பு முத்தமிட்டு இருப்பான்
என்றே தோனுதடி மகளே♥♥