எங்கு சென்றுத் தேடுவேன் கண்ணே

சுகமாக இருக்கிறது என்பதற்காக

அமிர்த கடைசலை அள்ளிக் கொட்டிய

உன் தேகத்தை அள்ளிக் குடிக்க முடியுமா ...

கிள்ளியெடுக்க முடியுமா?

வேண்டாம் இந்த வேதனை தரும் சுக சோதனை ... !!!!

உன் அழகைக் கண்டு கர்வப்பட்டு

கர்வப்பட்டே என் காலம் முடிந்து போனால்

பிற்காலத்தில் நீ என்ன செய்வாய் ?

அதனால் விட்டுவிட்டு இப்படியொரு அழகு சோதனையை ....

பிழைத்துக் கிடக்கட்டும் எனது இன்னுயிர் ....

இந்தப் பட்டாடை என்ன பாவம் செய்தது?

உனது மதிப்பு மிக்க உனது மதி வதனத்தில்

பட்டதாலேயே பட்டாடையை குறைத்து மதிப்பிடப்படுகிறதே ?

பிரம்மன் ஏட்டில் செதுக்கி பட்டில் இழைத்த

இந்த பாவைக்காக நாங்க பழியைத்

தாங்குவோம் என்கின்றனவோ பட்டுப்பூச்சிகள்....!!!!

தங்கச்சிலைக்கு தங்க நகைகளைப்

பூட்டி வைத்தவர்கள் மூடர்கள் என்று

தங்கநகைகளே கூறுகின்றனவாம் ....

பிறகென்ன ...

அவற்றின் ஜொலிப்பும் மதிப்பும் குறைந்து விட்டனவே ?

இவள் பாதக் கொலுசாகப் பயன்பட்டதால் தான்

நான் பவித்திரமடைந்தேன் என்று பெருமை பேசுமா உன் கொலுசு ?

பேசிவிட்டுப் போகட்டும் .... !!!!

அந்த செவ்வாழைக் கால்களையாவது

கண்டுவிடும் நோக்கில்

காலமெல்லாம் காத்துக்கிடக்கும் காளையர்களில்

காணக் கிட்டப்போவது எனக்கு மட்டும் தானே

என்று கர்வம் கொள்கிறேனடி அழகே ... !!!

அய்யகோ ....

ஏடு தாங்கவில்லையடி உன்னைப் பற்றி எழுதினால்......

எத்தனைச் சொன்னாலும் ஈடேறவில்லை எனது ஆசைகள் ....

அடிப் பெண்ணே ...

அகராதியில் உள்ள அத்தனை வார்த்தைகளிலும்

தேடிக் களைத்துவிட்டேன் ...

உன் அழகுக்கு ஈடாக எவ்வார்த்தையும்

புலனாகவில்லையேப் பெண்ணே ?

புதியக் கண்டுப்பிடிப்புக்காக புலவர்களை எங்கு சென்றுத் தேடுவேன் கண்ணே ? ......

எழுதியவர் : (21-Sep-14, 12:20 am)
பார்வை : 84

மேலே