பயனென்ன

வற்றிப்போன கடலும்
வழங்கிடாத வானும்
இருந்து பயனென்ன?

கற்றிடாத மனிதன்
பெற்றிடாத அறிவு
வாழ்வில் பயனென்ன?

உதவிடாத நட்பு
ஊருக்காக கற்பு
உள்ளதில் பயனென்ன?

செத்துப்போன வார்த்தை
செரிக்கமுடியா கருத்து
கவிதை பயனென்ன?

எழுதியவர் : அபி @ முஹம்மது நௌபல் (21-Sep-14, 12:15 am)
பார்வை : 81

மேலே