இதயமடிப் பெண்ணே இதயம்
நீ மூச்சுவிடும் போதெல்லாம்
நான் மூர்ச்சையாகும்படி சாபமிட்டது
யாரடிக் கண்ணே .... !!!
உனது இடைவெட்டில் அடைபட்டுப் போன
எனது இதயத்தை மீட்டெடுக்க
எந்த போர்க்கருவியும் பயன்படாது போலிருக்கே ?
இருந்துவிட்டுப் போகட்டும் என்று
உன் இடையிலேயே விட்டுவிட்டுச் செல்ல
அது என்ன இரவல் பொருளா?
இதயமடி பெண்ணே இதயம் .... !!!