என்றுமே அனுப்பாத கடிதங்கள்
இந்த அன்பிள்ளதவள் ஞாபகம் எனும் மையில் எழுதுவது ...
உன் நெஞ்சிலிருந்த நெருப்பை அணைத்தேன்
புகையை இன்னும் வெளிவிடுகிறாயே ,
என்னை நீ என்றும் நினைக்காதே
நான் நனைந்த ஆடு தெரியாமல் சிலுப்பிவிட்டேன்
அதனால் பலியாகிறேன் ஒவ்வொரு க்ஷணமும் !!
உனது பெயரை என் குழைந்தைக்கு வைத்து
உன்னை கேவலப்படுத்தவில்லை !!
உன் வேண்டுதலில் எனது நலனிருப்பதை
என் பிள்ளை ஆரோக்கியம் சொன்னது,
என்னை தயவுகூர்ந்து மன்னிகாதே
மன்னிப்பு அசிங்கப்படும் ,
மண் பசிக்கு நான் இரையாகும் போது
இவள் பாவத்தை நம்மால் ஜீரணம் செய்யமுடியாது என்று புலம்பும் ....
என்றோ ஒரு நாள் வேண்டுதலில் நீ இருப்பாய் !!!!
இந்த அதிர்ஷடமிள்ளதவன் சந்தோசம் எனும் மையில் கிறுக்குவது ...
காதல் என் நெஞ்சில் ஆணி அடித்தது
காலம் காந்தமாக வெளியே இழுத்தது
காலம் காலமாக சுவடுகளை சுமக்கும் என் நெஞ்சம்
உன்னை வாழ்த்தும் அணு தினமும் ......