உந்தன் விரல் தொடும் வேளைக்காக
“ ஒவ்வொரு நாளும்...
“ உனை நினைத்து....
“ உள்ளும் புறமும்...
“ உருகி நின்று...
“ என்றாவது...
“ எப்போதாவது..
“ என்றில்லாமல்...
“ நித்தமும் இப்படித்தான்...
“ இருப்பிடம் வேறாக...
“ சிந்தனை ஒன்றாக....
“ நிதர்சனம் புரியாமல்...
“ நிகழ்காலம்...
“ நம்மை வேறாக...
.
“ ஏதாவது நடந்து...
“ உன்னை நான் சேர...
“ அன்றும் இப்படித்தான்...
“ உன்னைக் கண்ட களிப்பில்...
“ ஒன்றும் புரியாமல்....
“ உருகி நிற்பேனோ...
“ மனம் ஏங்குதடி...
“ உந்தன் விரல் தொடும்...
“ வேளைக்காக!!!

