விளம்பர போதை
விளம்பர போதை
ஏற்றமாய் நானிருந்தேன்
ஏழு எட்டு வருடமுன்பு
மாற்றம் கான வந்ததடி மதிகெடுக்கும் விளம்பரமே!
முத்துபோன்ற பல்லழகி
முல்லை போன்ற சிரிபழகி கொத்து குலையாத குமரியின் தங்க நகை விளம்பரதால்
வந்தது இடர் என் வாழ்கையிலே வருமானம் போனதடி!
ஒருமாத சம்பளத்தில்
ஒன்றரை கஜம் பட்டிபுடவை.மறுமாத சம்பளத்தில் மாடன் சாரி ஐந்து இரு மாத சம்பளமும் விளம்பரத்தால் இல்லாமல் போனதடி!
உணவுக்கும் படிப்பிற்கும்
உடனுக்குடன் என்ற உள்ளாச விளம்பரத்தால்
ஒருலட்சம் ஆனதடி!
எழுத்து விளம்பரம் வண்ண திறைபட விளம்பரமும் பணத்தை வட்டிபோட்டு கறக்குதடி!
பாலிலும் கலபடம் பற்பொடியிலும் கலபடம்
சோப்பிலும் கலபடம் செஞ்சோற்ரிலும் கலபடம்
குடிநீரிலும் கலபடம்
குருமிலகிலும் கலபடம் இத்தனை கலபடம் இருபதை உள்ளாச விளபரம்காட்டி உண்மையை மறைகுதடி!
மட்டு மனசாட்சியில்லாத
மீடியா விளபரத்தால்
மாண்டுபோனதடி வாழ்கை மதிகெட்டு நிற்குதடி!
விருந்தினராய் வந்த
விளபரம் நம் நாட்டை வேட்டையாட பார்குதடி!
போற்றி புகழும் நம் பண்பாட்டை புதைக்க பார்குதடி!
இயற்கைக்கு இல்லை விளபரம் போலிக்கு தான் வேண்டும் விளபரம் புரிந்து நடந்துகொள்ளடி!
வேண்டாம் இந்த விளபர போதை வீனாய் அழியும்
வாழ்கையும் உடலும்
செயற்கையை தவிற்து இயற்கையில் இறுக்கும் இன்பத்தை உணர்ந்து வாழ்வோம் வளமாய் பல்லாண்டு காலம்