பழைய டைரி கவிதை

பழைய டைரி…!!
*
பரணையிலிருந்து கிடைத்தது
தாத்தாவின் பழைய டைரி
பிரித்துப் படித்தால்
பக்கமெல்லாம் எழுதியிருந்தது
கடன் கணக்கு.
*
அந்தக் காலத்துப்
பாட்டிகளெல்லாம்
குடும்பத்திற்கு
வழிகாட்டிகள்
இப்பொழுது
அனைவருக்கும்
அவர்கள் வெறும்
மூதாட்டிகள்.
*
தாத்தா நிலம்
வாங்கிப் போட்டார்.
அப்பா வீடு
கட்டி வாழ்ந்தார்.
விற்று தீர்த்தான்
குடிகார மகன்.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (22-Sep-14, 11:53 am)
பார்வை : 117

மேலே