காதல் வெறுக்க காரணம்
காரணமின்றி காதலை
மறுப்பது தானே இயல்பு
முதன் முறையாய்
காரணம் சொல்லி
காதல் மறுக்கவா ???
கண்களால் காதல் சொல்லி
கருவில் சுமந்தவளை
தவிக்க விட செய்கிறாய்
உன்னை மட்டுமே நினைக்கவைத்து
அதனால் உன்னை வெறுக்கிறேன்
கவிதையாய் பேசி மயக்கி
தோளில் சுமந்த தந்தையை
உதாசின படுத்த செய்கிறாய்
உன் அழகை ரசிக்க வைத்து ...
அதனால் உன்னை வெறுக்கிறேன்
பாசமாய் நடித்து நிஜ
பாசத்தை மறக்க செய்கிறாய்
என் தம்பி தங்கையை
இழக்க செய்கிறாய்
அதனால் உன்னை வெறுக்கிறேன்
இத்தனை பாசத்தை இழந்துதான்
உன் பாசம் கிடைக்குமென்றால்
அடித்து சொல்லுவேன்
காதல் வேண்டவே வேண்டாம் என ...