காதல் நிலைகள் - இராஜ்குமார்

காதல் நிலைகள்
===============

காதல்
மனதின் மேல்புறத்தில்
மெதுவாக சுரக்கிறது
கரத்தின் கணுக்களில்
வடுவாய் படிகிறது

காதல்
கனவுகளின் கதவில்
தாழ்பாளாய் தடுக்கிறது
பாதத்தின் பயணத்தை
படுக்கையில் முடிக்கிறது

காதல்
நிறமற்ற தாளில்
நிம்மதியாய் கொட்டுகிறது
நிற்காத பேனாவில்
திரவமாய் திரிகிறது

- இராஜ்குமார்

நாள் : 15 - 8 - 2011

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (22-Sep-14, 6:25 pm)
பார்வை : 97

மேலே