தந்தையின் பிரசவம்
![](https://eluthu.com/images/loading.gif)
பூவிருக்கும் புன்னகையில்
வாசம் இன்றி
மலையிருக்கும் மனதிற்குள்
பாதம் ஊன்றி
யாரிருந்தும் பார்வைக்கு
யாவும் வெறுமை
நிலைமாறித் தடுமாறும்
நடையில் வறுமை
செவிப்பறையை எட்டாது
செகத்தின் சத்தம்
சிறகுடுத்தி உயிர்ப்பறவை
இதயம் கொத்தும்
விழியிரண்டும் துளி மலரக்
காக்கும் போது
மகளொரு நாள் மணமாலை
சூடும்போது...
===========================
போது - மலரப் போகும் நிலை